மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்.. இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில், இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் அணி தொடரை வென்றது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நடைபெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2க்கு ஒன்று(2-1) என்ற கணக்கில் வங்கதேசம் அணி கைப்பற்றியது.
இதையடுத்து வங்கதேச அணிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.