பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி கைது | BJP | Annamalai

Update: 2023-06-20 12:19 GMT

சமூக வலைதளங்களில் அரசு குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி, சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன்.... உமா கார்க்கி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் செயல்பட்டுவரும் இவர், அவதூறு கருத்துகளை பரப்புவதாக திமுக ஐடி விங்க் புகார் அளித்து இருந்தது. இதனிடையே, சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படுவதாக, உமா கார்க்கிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று விருது வழங்கி பாராட்டினார். இந்நிலையில், அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக உமா கார்க்கியை கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்