அலகாபாத், சத்தீஸ்கர், பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 3 நீதிபதிகள் நியமனம் குறித்த உச்சநீதிமன்ற கொலிஜீயம் அமைந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அலகாபாத் தலைமை நீதிபதியாக ப்ரிதிங்கர் திவாகர், சத்தீஸ்கர் தலைமை நீதிபதியாக ரமேஷ் சின்ஹா, பாட்னா தலைமை நீதிபதியாக வினோத்.கே.சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.