ஐபோன் தொழிற்சாலையில் இனி 12 மணி நேரம் வேலை? | I Phone

Update: 2023-05-10 13:27 GMT

பெங்களூரு விமான நிலையம் அருகே 300 ஏக்கர் நிலத்தை பாக்ஸ்கான் நிறுவனம் 303 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து தருகிறது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில், 2019 முதல் ஐபோன்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செலவுகளை குறைக்க, 12 மணி நேர வேலை முறையை அங்கீகரிக்க ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள்கோரியதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் உற்பத்தி அளவை அதிகரிக்க திட்டமிட்டிருந்த பாக்ஸ்கான், திடீரென, பெங்களூரு விமான நிலையம் அருகே 300 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. அங்கு ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவி, ஐபோன் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகா சட்டமன்றத்தில், 12 மணி நேர வேலை முறையை அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா, மார்ச் மாதத்தில்

நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 12 மணி நேர முறை சட்டம் வாபஸ் பெறப்பட்டதால், கர்நாடாகவில் புதிய தொழிற்சாலையை தொடங்க பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்