தமிழக காவல்துறை சார்பில், ஆபரேஷன் புது வாழ்வு என்ற பெயரில் பிச்சைக்காரர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையை அடுத்த தாம்பரம், காஞ்சிபுரம், சலேம் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது, வரை ஆயிரத்து 800 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஆயிரத்து 800 பிச்சைக்காரர்களில் 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
255 பேர் அரசு இல்லங்களிலும், 367 பேர் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.
198 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.