மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் கிட்னி... அதிசயம் நிகழ்ந்தது

Update: 2024-04-25 09:35 GMT

அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் 2வது முறையாக மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள NYU லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தில் இம்மாதம் 54 வயது லிசா பிசானோ இதய செயலிழப்பு மற்றும் மிகத்தீவிரமான சிறுநீரக பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். முதலில் லிசா பிசானோவுக்கு மெக்கானிக்கல் ஹார்ட் பம்ப் பொருத்தப்பட்டது. அதன் பின்பு மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. முதன்முதலில் மார்ச் மாதம் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ஒருவருக்கு இதேபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்