"ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க...வைரலாகும் ட்ரம்ப் "மக்-ஷாட்" புகைப்படம் கிண்டலடித்த அமெரிக்க அதிபர்

Update: 2023-08-27 10:19 GMT

கைதான முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புகைப்படத்தைப் பார்த்து, அழகாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கிண்டலடித்துள்ளார்...

கடந்த முறை அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக தொடரப்பட்ட ஜார்ஜியா வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பின் ட்ரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவர் சரணடைந்தார். அட்லாண்டா சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ட்ரம்பிற்கு சிறைக் கைதிகளுக்கு பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. அதன்படி, அவரை காவல்துறையினர் "மக்-ஷாட்" புகைப்படம் எடுத்தனர். அவருக்கு அடையாள எண்ணும் வழங்கப்பட்டது. 20 நிமிடங்களுக்குப் பின் ட்ரம்ப் ஜாமினில் வெளிவந்த நிலையில், அந்த மக் ஷாட் புகைப்படத்தை தனது சமூக வலைதளமான ட்ரூத்தில் வெளியிட்ட ட்ரம்ப், "தேர்தல் இடைமறிப்பு...எப்போதும் சரணடையக் கூடாது" என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தார். இப்புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் பைடனிடம் கருத்து கேட்கப்பட்ட போது, "ட்ரம்ப் மிகவும் அழகாக இருப்பதாக" அவர் கருத்து தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்