உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 20 மாணவர்கள் சென்னை வருகை - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர்
உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 4 விமானங்களில் 20 மாணவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.;
உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். பின்னர், இவர்கள் ஹங்கேரி, ருமேனியா, போலந்து நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் டெல்லி, மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, அந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் ஒரு பகுதியாக, ஒரே நாளில் 4 விமானங்களில் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மாணவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை முலமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.