ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி - ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக கோதுமை

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக, பணத்திற்கு பதிலாக கோதுமை வழங்கப்படுகிறது.;

Update: 2022-01-13 11:58 GMT
ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக, பணத்திற்கு பதிலாக கோதுமை வழங்கப்படுகிறது. 2021 ஆகஸ்ட்டில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதுமாக கைபற்றி, ஆட்சி அமைத்தனர். ஏராளமானவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், உணவு பஞ்சமும் உருவானது. 50,000 டன்கள் கோதுமையை இந்திய அரசு லாரிகள் மூலம் ஆப்கானிஸ்தானிற்கு கடந்த நவம்பரில் அனுப்பியது. தாலிபான் அரசின் நிதிநிலை படுமோசமாக உள்ளதால், பொதுத் துறை ஊழியர்களுக்கு தினக் கூலியாக சம்பளத்திற்கு பதிலாக 10 கிலோ கோதுமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தாலிபான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தான் அரசு 18,000 டன்கள் கோதுமை அளித்துள்ள நிலையில், மேலும் 37,000 டன்கள் அனுப்ப உள்ளது. இந்தியாவிடம் மேலும் 55,000 டன்கள் கோதுமை கோரியுள்ளதாக துணை நிதியமைச்சர் பாசெல் பரி பாசிலி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்