டஜன் கணக்கானவர்களை கொன்ற பாதுகாப்புப் படை - கஜகஸ்தானில் பரபரப்பு

கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களில் டஜன் கணக்கானவர்களை பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்துள்ளனர்.;

Update: 2022-01-07 06:45 GMT
கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களில் டஜன் கணக்கானவர்களை பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்துள்ளனர். அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அல்மாட்டி நகர மேயர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டு வீசிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில், டஜன் கணக்கானவர்களைப் பாதுகாப்புப் படை கொன்று குவித்த நிலையில், 18 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்