காபூல் தாக்குதலுக்கு பதிலடி - ஐஎஸ் முகாம்களை தாக்கிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக ஐஎஸ் முகாம்களை அழித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-10-05 09:33 GMT
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக ஐஎஸ் முகாம்களை அழித்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் காபூல் நகரில் உள்ள மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் குடிமக்கள் உள்ளிட்ட சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து இதற்கு காரணமாக கருதப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்க முகாம்களை தேடும் பணியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் வடக்கு காபூலில் நடைபெற்ற சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் முகாமை தலிபான்கள் தாக்கி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்