அதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு

ஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2021-07-28 10:43 GMT
ஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர். கரீபியன் தீவில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் அதிபர் ஜொவினெல் மொய்சே படுகொலை செய்யப்பட்டார். உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலையில் தொடர்பாக வெளிநாட்டு கூலிப்படையை சேர்ந்த 26 பேரை ஹைதி போலீசார் கைது செய்தனர். அதில் 6 பேர் அமெரிக்கா ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹைதி தலைநகர் போர்ட் அவு பிரின்ஸில் மறைந்த அதிபரின் புகைப்படத்தை வைத்து இறுதி சடங்கு செய்த அவரது ஆதரவாளர்கள், படுகொலைக்கு நீதிக்கேட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்