தோல் நோயால் பாதிப்படைந்த சுறாக்கள் -கடல் உயிரியலாளர்கள் தகவல்

மலேசியாவில் கடல் உயிரியலாளர்கள் நடத்திய ஆய்வில், வெள்ளை சுறா இன வகையைச் சேர்ந்த ஒயிட் டிப் ரீஃப் சுறாக்கள் தோல் நோயால் பாதிப்படைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Update: 2021-06-14 11:35 GMT
தோல் நோயால் பாதிப்படைந்த சுறாக்கள்  -கடல் உயிரியலாளர்கள் தகவல் 

மலேசியாவில் கடல் உயிரியலாளர்கள் நடத்திய ஆய்வில், வெள்ளை சுறா இன வகையைச் சேர்ந்த ஒயிட் டிப் ரீஃப் சுறாக்கள் தோல் நோயால் பாதிப்படைந்திருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுறாக்களின் தலைப்பகுதிகளில், தோல் நோய்களோடும், புள்ளிகள் மற்றும் புண்கள் இருப்பதைப் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், மலேசிய கடலில் ஆய்வு மேற்கொண்ட கடல் உயிரியலாளர்கள், இதற்கு கடல் நீரின் தட்பவெப்ப நிலை மாற்றமே காரணம் எனக் கண்டறிந்தனர். குறிப்பாக சிபாடன் கடலில் தட்ப வெப்ப நிலை 29.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்