ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை - சீரான தடுப்பூசி விநியோகத்துக்கு வலியுறுத்தல்
ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...;
அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரொனா தடுப்பூசிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளார். செவ்வாய் அன்று ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டெரெஸை, நியுயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சந்தித்து பேசினார்.உலக அளவில் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும், அவற்றின் விநியோகங்களை உலக நாடுகளிடையே சம சீரான, நியாயமான முறையில் செயல்படுத்தவும் தேவையான திட்டங்களை ஐ.நா மூலம் முன்னெடுக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.உலக அளவில் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்து, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய இந்தியாவும், தென் ஆப்பரிக்காவும் முன்மொழிந்த திட்டம் பற்றியும் விவாதித்தாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.இந்த திட்டத்திற்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பருவநிலை மாற்றம், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், இந்தியாவை சுற்றியுள்ள பகுதிகளின் முன்னேற்றம், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய பின் அங்கு அமைதியை நிலைநாட்டுவது உள்ளிட்ட பல்வேறு இதர விசியங்கள் பற்றியும் ஐ.நா. பொதுச்செயலாளார் உடன் விவாதித்துள்ளதாக ஜெய்சங்கர் தனது டிவிட்டர் மூலம் கூறியுள்ளார்.