கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அதிபர் டிரம்ப் - இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-10-05 03:11 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பின்  உதவியாளர் ஹிக்ஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து  அதிபர் டிரம்ப் அவரது மனைவி மெலனியாவுக்கு  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இருவருகும் கொரோனா தொற்று உறுதி செயப்பட்டதையடுத்து தங்களை தனிமைபடுத்தி கொண்டனர். 

இந்நிலையில் டிரம்புக்கு காய்ச்சல் நீடித்ததால் மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவகுழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். காய்ச்சலால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து சோர்வாக இருந்த டிரம்ப்புக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் காய்ச்சல் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் சீராக இயங்குவதாகவும், மருத்துவமனையிலிருந்து டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்து கருப்பு காரில் முகக்கவசம் அணிந்தபடி பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ வந்த அதிபர் டிரம்ப் வெளியே கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார். அவர் நலமுடன் இருப்பதை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்