நாய்க்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் - அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி...

அமெரிக்காவில் ஒரு நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

Update: 2020-05-21 08:49 GMT
இனிமேல் யாரும் யாருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கவே யோசிக்க வேண்டும் என்பது போல அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா டெக் பல்கலைக்கழகம், ஒரு நாய்க்கு கௌரவ டாக்டர் பட்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு யாரையும் அவமதிக்கும் நோக்கமெல்லாம் இல்லை. மூஸ் என அழைக்கப்படும் இந்த நாய், நிஜமாகவே இந்த பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ துறையில் சிகிச்சை விலங்காக பணியாற்றுகிறது. பலரின் தற்கொலை எண்ணங்களை மாற்றுவதற்கும் மன அழுத்தத்தை போக்குவதற்கும் இது போன்ற நாய்கள் உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள். பலரின் மன வியாதிகளை குணமாக்கிய இந்த நாய் தற்போது கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகிறது. எனவேதான் இறப்புக்குள் வழங்கப்படும் பெரும் கவுரவமாக டாக்டர் பட்டம் இந்த நாய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது தகுதிக்கு கிடைத்த பட்டம்தான்!
Tags:    

மேலும் செய்திகள்