ஹாங்காங் சட்டமன்றத்தில் மோதல் : சீன ஆதரவு- எதிர்ப்பு உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஹாங்காங் சட்டமன்றத்தில் சீன எதிர்ப்பு உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-09 04:08 GMT
சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஹாங்காங் சட்டமன்றத்தில் சீன எதிர்ப்பு உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டனர். சீன சட்டசபையின் முக்கியக் குழு ஒன்றின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அவர்களை சபைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். ஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கும் சட்டத்துக்கு எதிராக மக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அரசியல் ரீதியாக எதிர்ப்பாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் எதிர்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு நீக்கப்பட்டதும் சட்டசபை கூடிய முதல் கூட்டத்திலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்