உருகவைக்கும் மகளின் பாசப் போராட்டம் - உணர்வு பொங்கவைக்கும் உண்மை சம்பவம்

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-04-17 02:40 GMT
அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரின் மகள் தன் தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்தான் இது.

தன் தாய் எப்படியாவது உடல்நலம் தேறி வீட்டிற்கு திரும்பிவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்த மகளின்
நம்பிக்கை பலிக்கவில்லை.

இந்திய வம்சாவளியை சேர்ந்த மத்வி அயா - ராஜ் தம்பதியினர் கடந்த 1993 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினர். நியூயார்க் நகர மருத்துவமனை ஒன்றில் மத்வி அயா மருத்துவராகப் பணிபுரிந்துவந்தார். இவர்களுடைய ஒரே மகள் மின்னொளி.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்வி அயாவும் துரதர்ஷ்டவசமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.

மார்ச் 18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 11 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது,  எப்படியாவது மீண்டு வாருங்கள், உங்களால் முடியும் அம்மா என்று அவரது சொல்போனுக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார், அவரது ஒரே மகளான மின்னொளி.

ஆரம்பத்தில் "விரைவில் வீடு திரும்புவேன். லவ் யூ" என்று மகளுக்கு பதிலளித்தார் மத்வி. அடுத்தடுத்த சில நாட்களில் நிலைமை மோசமானதால், தினமும் மகள் அனுப்பும் எந்த குறுந்தகவலுக்கும் பதில் வரவே இல்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து தன் தாயின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார் மின்னொளி.

கடைசிவரை தாயிடமிருந்து பதில் வரவே இல்லை.
11 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து
வந்த அழைப்பு, அந்த துயரமான செய்தியை தெரிவித்தது.

காற்றுமூலம் பரவும் தொற்றை தடுக்க முடியாத சாதாரண மாஸ்க்கையே பணியின்போது பயன்படுத்துவதாக, தன் கணவரிடம் மத்வி அயா தெரிவித்தது தற்போது தெரியவந்திருக்கிறது.

கொரோனா பாதித்த பலரின் உயிர்காத்த பெண் மருத்துவர் மத்வியின் உயிரைக்காக்க அந்நாட்டு
அரசு தவறிவிட்டது.

தன் தாய் இறந்து 2 வாரங்களுக்கு பிறகும், ஆற்றாமையால் தவிக்கும் மகள் மின்னொளி, 
இன்றும் தாயின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

எப்படியாவது திரும்ப வந்துவிடுங்கள் என்று..!

Tags:    

மேலும் செய்திகள்