அமெரிக்க அதிபரின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணம் : ட்ரம்ப் மருமகன் உள்பட அமைச்சரவை குழுவும் இந்தியா வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையின்போது அவரது மருமகன் ஜாரத் குஷ்னர் உள்பட முக்கிய அமைச்சரவை குழுவும் வருகை தர உள்ளது.

Update: 2020-02-20 13:02 GMT
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  வரும் 24 ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளார். அவருடன், மனைவி மெலானியா, மருமகன் ஜாரத் குஷ்னர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் 3  பேர் வருகை தர உள்ளனர்.  ஜாரத் குஷ்னர் அதிபரின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வர்த்தகம், நிதித்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளும் அதிபருடன் வர உள்ளனர்.

இந்தியாவில் 36 மணி நேரம் உள்ள ட்ரம்ப்,  முதல் நாளில் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.  அமெரிக்க வர்த்தகத்துறை பிரதிநிதியான ராபர்ட் லைட்ஹைசர், கடந்த வாரம் இந்தியா வர இருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிபருடன் வர உள்ள குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார்.  அகமதாபாதில் இருந்து ஆக்ரா செல்லும் ட்ரம்ப்,  அங்கு தாஜ்மகாலை காண இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்