கொரோனா வைரஸ் பாதிப்பு - உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை
கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.;
கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள உவான் நகருக்கு செல்லவும், நகரில் இருந்து மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.