இலங்கை அதிபர் கோத்தபய உடன் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் சந்திப்பு

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

Update: 2019-11-19 21:28 GMT
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் திடீர் பயணமாக, கொழும்பு சென்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த அவர், இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, வரும் 29-ஆம் தேதி, கோத்தபய ராஜபக்சே, டெல்லி வருவது உறுதியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்