Erode Attack | ஆத்திரத்தில் நண்பன் கழுத்தில் குத்திவிட்டு சிரித்துக்கொண்டே ஸ்டேஷன் சென்ற இளைஞர்
நண்பன் கழுத்தில் கத்தியால் குத்திய இளைஞர் கைது
ஈரோடு அருகே, நண்பனை கத்தியால் குத்திவிட்டு சிரித்தபடியே காவல்நிலையம் சென்ற கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தியூரை சேர்ந்தவர் தயாளன். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் தனது கல்லூரி நண்பர் கௌதமிற்கு 10 ஆயிரம் ரூபாய் கடனாக தந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும், பர்கூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கௌதம் தான் வைத்திருந்த கத்தியால், தயாளன் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார். தற்போது தயாளன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் கௌதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.