Chennai | கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கே பெருமை சேர்த்த சென்னையின் தங்கம் மகள்
சர்வதேச கேரம் போட்டி- தங்கம் வென்ற வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துகள்
மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச கேரம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள புது வண்ணாரப்பேட்டை இளம்வீராங்கனை கீர்த்தனாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வீட்டு வேலை செய்து மகளின் ஆசையை நிறைவேற்றிய சாம்பியன் கீர்த்தனாவின் தாய் இந்திராணி, ஒழுகும் வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.