இலங்கை : யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா
இலங்கையில் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.;
இலங்கையில் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருந்திருவிழாவின் 24ஆம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது . இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு தீபாராரனை நடைபெற்றது. பின்னர் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் கந்தசுவாமி எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு பக்தி பரவசதுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். இன்று காலை தீர்த்தோற்சவத்துடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.