புதிய அரசியலமைப்பில் திடமாக இல்லை என்றால், தமிழ் மக்களின் அடையாளமே தெரியாமல் போய்விடும் - விக்னேஸ்வரன்

புதிய அரசியலமைப்பில் திடமாக இல்லை என்றால், தமிழ் மக்களின் அடையாளமே தெரியாமல் போய்விடும் என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-21 03:57 GMT
புதிய அரசியலமைப்பில் திடமாக இல்லை என்றால், தமிழ் மக்களின் அடையாளமே தெரியாமல் போய்விடும் என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாட்டு திட்டங்களை அரசு தரும் போது பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். பாரம்பரியம்,  சுயாட்சி  உரிமை , சமஷ்டி அரசு ஆகிய மூன்று விசயங்களில் திடமாக இருப்பதாகவும், இவை தங்களுக்கு கிடைக்காத நிலையில், வரும் காலங்களில் வட கிழக்கு மாகாணம் முழுமையாக  தங்களுக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும் என்றும் 
அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்