பிரான்ஸ் ஆர்ப்பாட்டம் : கடைகளில் பொருட்களை சூறையாடிய மாணவர்கள்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது.;

Update: 2018-12-04 04:07 GMT
டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. 250க்கும் மேற்பட்ட இடங்களில் தீவைப்பு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 400 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் "ஆபர்வில்லியர்ஸ்" பகுதியில் உள்ள பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கடைகளை சூறையாடினர். கடைகளில் இருந்து பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை நடத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்