இலங்கை பிரச்சினை : விக்னேஸ்வரன் கருத்து

இலங்கையில் தற்போது உருவாகி உள்ள அரசியல் நெருக்கடியால், மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-06 15:57 GMT
இலங்கையில் தற்போது உருவாகி உள்ள அரசியல் நெருக்கடியால், மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். உச்சகட்ச குழப்பம் நிலவும் இலங்கை நிலவரம் குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார போட்டியில், யார் அதிகமாக தமிழ் மக்களை நசுக்குகிறார்களோ, அவர்களே, சிங்கள மக்களின் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற உத்தியை, அதிபர் ஸ்ரீ சேனா , கையில் எடுத்துள்ளதாக 
குற்றஞ்சாட்டி உள்ளார். தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதை புரிந்துகொண்டு இனி மேலும் காலம் தாழ்த்தாமல்,  தமிழ் மக்களுக்கான  நீதியை பெற்றுக்கொடுக்க, சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என தமது அறிக்கையில், விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்