இறப்பிலும் ஒன்று சேர்ந்த காதல் ஜோடி

கேரள மாநிலத்தை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் அமெரிக்காவில் 800 அடி உயர மலையில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-31 07:50 GMT
கேரள மாநிலம் செங்கனூரை சேர்ந்த இவர்கள், கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.  அங்கு ஐ.டி துறையில் ஒன்றாக பணிபுரிந்து வந்த இவர்கள், சாகச சுற்றுலா மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு,  800 அடி பள்ளத்தாக்கில் இருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இருவரும் மலையில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்லூரி முதல் கலிபோர்னியா வரை ஒன்றாகவே சுற்றித்திரிந்த காதல் ஜோடி, ஒன்றாகவே உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்