டிரம்ப் மனைவி மெலனியா சென்ற விமானத்தில் கோளாறு

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

Update: 2018-10-18 07:04 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா சென்ற விமானம், இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிலடெல்பியா செல்வதற்காக ஆன்ட்ரூஸ் ராணுவ விமான தளத்தில், விமானம் ஒன்றில் மெலனியா ஏறினார். புறப்பட்ட சிறிதுநேரத்தில், விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்