அமெரிக்க அரசு அதிரடி : பாகிஸ்தானுக்கான ரூ. 2,130 கோடி நிதியுதவி ரத்து

பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கத் தவறியதால் பாகிஸ்தானுக்கான 2 ஆயிரத்து 130 கோடி நிதியுதவியை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Update: 2018-09-03 03:00 GMT
பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கத் தவறிவிட்டதாக, பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணம், மற்ற சில அவசரத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் இந்த முடிவால் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் சரிவை சந்திக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்