இலங்கையில் 500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய சீன கப்பலின் பாகங்களை தேடும் பணி தீவிரம்
பதிவு: ஆகஸ்ட் 15, 2018, 11:24 AM
இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே, அல்லைப்பிட்டி என்ற கடல் பகுதியில், 500 ஆண்டுகளுக்கு முன் சீன கப்பல் ஒன்று மூழ்கியது. அந்த கப்பலின் உடைந்த பாகங்கள் அந்த இடத்தில் கிடப்பதாக தெரிந்த தகவலின் அடிப்படையில், கடந்த 1980ம் ஆண்டில் ஆரம்பகட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இலங்கை போர் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அகழ்வாராய்ச்சி பணிகளை மீண்டும் தொடருவதற்கு, இலங்கை மற்றும் சீன அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, அல்லைப்பிட்டி கடற்பகுதியில் இரு நாடுகளின் தொல்பொருள் ஆய்வாளர்களும் இணைந்து கப்பலின் பாகங்களை வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.