8 இடங்களில் காட்டுத் தீ - தீயை அணைக்கும் முயற்சியில் விமானங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக காட்டு தீ பரவி வருகிறது.

Update: 2018-08-07 07:29 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக காட்டு தீ பரவி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான விளை நிலங்கள்  சேதமாகி வருகின்றன. ஆரேஞ்சு கவுண்டி நகரில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட  தீ விபத்திற்கு 700 ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பரவி வரும் காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து,க்ளீவ்லாண்ட் தேசிய வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்