தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் - உலக சுகாதார நிறுவனம்

தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது

Update: 2018-08-04 12:55 GMT
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி 2014-இல் துவக்கி வைத்தார். அதன்படி இதுவரை 7.9 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, திறந்தவெளி கழிப்பிடங்களினால் ஆண்டுக்கு சுமார் 19.9 கோடி பேர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டதாகவும், மேலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் வயிற்றுப்போக்கு நோய், 18.1 சதவீதமாக உள்ளதாகவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட பகுதிகளில் அது 12.1 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திறந்தவெளி கழிப்பிடங்கள் உள்ள பகுதிகளில் 41.2 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளதாகவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட பகுதிகளில் அது 28.3 சதவீதமாக குறைந்துள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.2019 அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால், மூன்று லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்