உயிருக்கு போராடிய குட்டிகள்.. காப்பாற்ற முடியாமல் தவித்த தாய் - கடவுளே அனுப்பிய உதவி..
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நாய்குட்டிகள் இருந்த பகுதியை தண்ணீர் சூழ்ந்த நிலையில், போலீசார் அதனை பாதுகாப்புடன் மீட்டு தாயிடம் சேர்த்தனர். அங்கு பெய்த கன மழையால், தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் நாய் ஒன்று தண்ணீர் சூழ்ந்த பகுதியில், தான் ஈன்ற குட்டிகளை பத்திரப்படுத்தி பாதுகாத்து வந்தது. அப்போது, நாயின் பிரச்சனையை புரிந்து கொண்ட போலீசார், அதன் குட்டிகளை காப்பாற்றி கழுவி சுத்தம் செய்து தாய் நாயிடம் ஒப்படைத்தனர்...