`85 கிலோ கெட்டுப்போன மீன்கள்' - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

Update: 2024-04-25 02:51 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் 85 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகார்களை தொடர்ந்து சோதனையிட்ட அதிகாரிகள், புதிய மீன்களுடன், கெட்டுபோன் மீன்களை கலந்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, மத்தி, அயிலை, சங்கரா, இறால் என கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால், கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்