அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தனர். இருவர் மீதும் திமுக தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்ற நிலையில், இருவரையும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி, திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.