கோவை மேட்டுப் பாளையம் அருகே கன மழை காரணமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குள் மழை நீர் புகுந்த நிலையில், அதை ஆசிரியர்களே வெளியேற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்... திம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குள் புகுந்த மழை வெள்ளம் குட்டை போல் தேங்கியது... மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற ஊராட்சி சார்பில் யாரும் வராததால் தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமையில் ஆசிரியைகளே தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.