தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் மக்கள் சென்னையை நோக்கி ஒரே நேரத்தில் படையெடுத்ததால் செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி ஏற்கனவே மக்கள் சென்று இருந்தனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை நோக்கி ஒரே நேரத்தில் மக்கள் படையெடுத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.