பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா... ஆசை மகனுக்கு வேட்டி அணியும் விழா - ஆச்சரியப்படுத்திய பெற்றோர்
தமிழகத்தில் வயதுக்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துவது போல், ஆந்திராவில் 15 வயதுடைய ஆண் பிள்ளைகளுக்கு வேட்டி அணியும் விழா நடத்துவது வழக்கம். விழா அன்று தாய் மாமன் பழம், பாக்கு சீர் வரிசை தட்டுடன் பட்டுவேட்டி எடுத்து கொடுப்பார். அந்த வேட்டியை இளைஞர் அணிந்து கொண்டு, நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களின் காலில் விழுந்து வணங்குவார். இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில், மாமல்லபுரத்தில் வசித்து வரும், ஆந்திர தம்பதி வெங்கடேஷ் - ஹரிப்பிரியா தங்கள் மகன் வெங்கட வினய்க்கு வேட்டி அணியும் விழா நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக, பத்திரிகை அடித்து, ஊர் ஊராக சென்று தங்கள் உறவினர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த பத்திரிகை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.