"சிலிண்டர் இல்லை" கழிவறை அருகே சமையல்.. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அவல நிலை

Update: 2023-08-19 04:29 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்காததால், பள்ளி குழந்தைகளுக்கு திறந்தவெளியில் சமையல் செய்து வருகின்றனர். ஊ.மாரமங்கலம் புதூரில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைப்பதற்காக கேஸ் அடுப்பு உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இருப்பினும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாததால், கழிவறை அருகே திறந்தவெளியில் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இதுகுறித்த கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்