பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - உறைந்து நின்ற அதிகாரிகள்
மதுரை மேலூரில், பத்திரப்பதிவு செய்ய பணம் கேட்பதாக வந்த புகாரையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலூர் மேற்கு சார் பதிவாளர் அப்துல் சித்திக் இன்று விடுப்பில் இருந்ததையொட்டி, பொறுப்பு பதிவு அலுவலராக ஜானி செயல்பட்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் மூர்த்தியிடம், பத்திர பதிவை தாமதப்படுத்துவதாகவும், பணம் கேட்பதாகவும் ஒருவர் புகாரளித்தார். இதனைத்தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.