பஸ்க்கு முன் நிலைகுலைந்த நபர்.. சற்றும் யோசிக்காமல் SI செய்த செயல் -குவியும் பாராட்டு.. நெகிழ்ந்த MP

Update: 2024-04-28 08:14 GMT

மதுரையில், மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளரை விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட காணொளியில், பேருந்துக்கு முன்பு சாலையில் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கரின் செயல் பாராட்டுதலுக்குரியது, போற்றுதலுக்குரியது என பதிவிட்டுள்ளார். அவருடன் தொலைபேசியில் பேசி அவருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தேன் என்றும், அந்த காணொலியில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்