முத்தூட் பைனான்ஸில் நகைகள் திருட்டு..சென்னையில் பரபரப்பு

Update: 2023-08-06 14:45 GMT

சென்னை திநகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் கணக்கு வழக்கு சரிபார்ப்பு பணிகள் நடந்தபோது, ஆடிட்டர் ரூபன் செல்வக்குமார் என்பவர் 9 சவரன் நகைகளை திருடி சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆடிட்டர் ரூபன் செல்வகுமார் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்