"மக்களை நாய் கடித்தால்.." - ஓனர்களுக்கு நகராட்சி கடும் எச்சரிக்கை

Update: 2023-11-26 06:14 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌வ‌ர்க‌ளை தெருநாய்கள் கடித்த‌தில், 10க்கும் மேற்பட்டோர் ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருவது அதிகரித்துள்ளது. ஏழு ரோடு ச‌ந்திப்பு பகுதியில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் என ஏராளாமானோர் நடந்து சென்றுள்ளனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட நபர்களை, தெரு நாய்கள் துரத்தி க‌டித்துள்ளன. இதில் ரத்தக் காயங்களுடன் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  • வீட்டில் வளர்க்கும் நாய்களை வீதிகளில் விடும் நபர்கள் மீதும், உரிமம் இல்லாமல் நாய்களை வளர்ப்ப‌வ‌ர்க‌ள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.
Tags:    

மேலும் செய்திகள்