தமிழகத்தை உலுக்கிய குன்னூர் விபத்து... ஓட்டுநர்கள் பரபரப்பு தகவல் | Bus Accident

Update: 2023-10-02 05:16 GMT

மலைப்பாதைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, டிஜிட்டல் போர்டுகளை நெடுஞ்சாலைத்துறை வைக்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு மட்டுமே எழுதிவிட்டு ஓட்டுநர் உரிம‌ம் பெறும் நடைமுறை இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த மலைப்பாதைக்கான பயிற்சியை ஆர்டிஓ அலுவலங்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மலைப்பாதைகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் கியரிலேயே வாகனங்களை இயக்கினால், பிரேக் பிரச்சினை ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்