"மீனவரை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் முதல்வர்" - கனிமொழி எம்பி நெகிழ்ச்சி பேச்சு
மீனவரை சுகாதாரத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
குமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் மீனவர் தின விழா நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மீனவ மக்களுக்காக சட்டமன்றத்தில் பேச ஆளில்லை என்றும், மீனவரான அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவிற்கு வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, மா.சுப்பிரமணியனை அழைக்காததால் விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்றார்.