மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், சி.என்.ஜி. கேஸ் மூலம் இயங்கும் கார் தீப்பற்றி விபத்திற்குள்ளானது. தீ மளமளவென பரவி கார் முழுவதும் கொழுவிட்டு எரிந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை