கூடலூர் அடுத்த பந்தலூர் வனப்பகுதியில் தங்க கற்களை வெட்டி எடுப்பதை தடுக்கும் பணியில், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கோல்டு மைன்ஸ் பகுதியில் அதிகாலை நடமாடிக் கொண்டிருந்த பரமேஸ்வரன், ஜெயச்சந்திரன், யோகேந்திரன் ஆகிய மூவரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த பொருட்களை ஆய்வு செய்ததில், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், பேட்டரி ஆகியவை இருந்தது தெரியவந்தது. அவர்கள் வனப்பகுதிக்குள் விலங்குகளை வேட்டையாட வந்தார்களா, நாச வேலைக்கு திட்டமிட்டு வந்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்