தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு "பிரதமர் சான்றிதழ் தேவையில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லையென்றும் அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-09 18:45 GMT
தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லையென்றும் அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்  தான் 8 மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு நம்பர் ஒன் என்று பெயரெடுக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த 8 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளைவிடத் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது என கேள்வி எழுப்பினார்.  நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்