தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மதுரையை சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தனர்..;
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மதுரையை சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தனர்..
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாக மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்கிற செந்தில் குமார் மீது புகார்கள் எழுந்தன. இதன்பேரில் தேசிய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது முகமது இக்பால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் மண்ணை பாவா உள்ளிட்டோருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் உறுதியானது. இதன்பேரில் முகமது இக்பால் கைது செய்யப்பட்டார்.